போதைப் பொருட்களிலிருந்து அனைவரையும் பாதுகாப்போம்

- இன்றைய குத்பா பிரசங்கத்தை அமைக்குமாறு ஜம்இய்யா வேண்டுகோள்

போதைப் பொருட்களிலிருந்து சிறார்கள், இளைஞர்கள், ஆண்கள், பெண்கள், குடும்பங்கள், சமூகம், தேசம் என அனைவரையும் பாதுகாப்போம் என்ற தலைப்பில் இன்று (03) வெள்ளிக்கிழமை பள்ளிவாசல்களில் இடம்பெறும் குத்பாவை (பிரசங்கத்தை) அமைத்துக் கொள்ளுமாறு, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை வேண்டுகோள் விடுத்துள்ளதுஷ

நாட்டிலுள்ள சகல கதீப்மார்களுக்கும் இவ்வேண்டுகோளை விடுப்பதாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

போதைப் பொருள் பாவனை காரணமாக நம்நாட்டு மக்கள் பல நெருக்கடிகளுக்கும் பிரச்சினைகளுக்கும் சீரழிவுகளுக்கும் நாளுக்கு நாள் முகங்கொடுத்து வருவது நாம் அறிந்ததே.

அண்மையில் போதைப் பொருள் பாவனைக்கு அடிமையான ஒருவர் ஒரு சிறுமியை கொலை செய்த செய்தி நம்அனைவரையும் ஆழ்ந்த கவலையில் ஆழ்த்தியது. இஸ்லாம் போதைப் பொருள் பாவனையை தடைசெய்துள்ளதுடன் இதற்கு எதிராக செயற்படுவது சமூகத்தில் வாழும் ஒவ்வொருவரின் பொறுப்பாகும் என்றும் போதித்துள்ளது.

ஆகவே, போதைப் பொருள் இஸ்லாத்தில் தடைசெய்யப்பட்டுள்ளது என்பதையும் இதனால் மக்களுக்கு ஏற்படும் விபரீதங்களையும் தெளிவுபடுத்தி எதிர்வரும் குத்பாக்களை அமைத்துக் கொள்ளுமாறு சகல கதீப்மார்களையும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கேட்டுக் கொள்கின்றது.

அஷ்ஷேக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா

அஷ்ஷேக் எம். அப்துல் முக்ஸித்
செயலாளர் - பிரச்சாரக் குழு
அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா


Add new comment

Or log in with...