ஜோன்ஸ்டனுக்கு எதிரான இலஞ்ச ஊழல் வழக்கு மீண்டும் தாக்கல்

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ உள்ளிட்ட மூவருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு மீண்டும் வழக்கு தாக்கல் செய்துள்ளது.

இவ்வழக்குகளின் பிரதிவாதிகளாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ, சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் எராஜ் பெனாண்டோ, முன்னாள் செயற்பாட்டு அதிகாரி மொஹமட் ஷாகிர் ஆகிய மூவருக்கு எதிராகவே இவ்வாறு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

2012 இல் சதொச ஊழியர்களை அரசியல் நடவடிக்கைக்கு பயன்படுத்தியமை காரணமாக அரசாங்கத்திற்கு ரூ. 84 இலட்சம் (ரூ. 8,465,000)  நஷ்டம் ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ஏற்கனவே தாக்கல் செய்திருந்த வழக்கில், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் மூவரின் எழுத்துமூல அனுமதி இல்லையென, பிரதிவாதி சார்பில் முன்வைக்கப்பட்ட அடிப்படை ஆட்சேபணையைத் தொடர்ந்து, கொழும்பு மேல் நீதிமன்றம், குறித்த வழக்கை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு உரிய முறையில் தாக்கல் செய்யவில்லை அறிவித்து, குறித்த மூவரையும் வழக்கிலிருந்து விடுதலை செய்திருந்தது.

இதனைத் தொடர்ந்து குறித்த வழக்கை வாபஸ் பெற்ற இலஞ்ச ஊழல் ஆணைக்குழு, மீண்டும் அதனை தாக்கல் செய்துள்ளது.

கடந்த 2010 ஜனவரி 01 முதல் 2010 செப்டெம்பர் 31 வரை ஜோன்ஸ்டன் பெனாண்டோ வர்த்தக அமைச்சராக இருந்த காலத்தில், சதொச ஊழியர்களை அவர்களின் பணிகளில் இருந்து விடுவித்து, அரசியல் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தியதன் மூலம், அரசாங்கத்திற்கு ரூ. 8,465,000 நஷ்டம் மற்றும் இலஞ்ச சட்டத்தின் கீழ் ஊழல்.ஜோன்ஸ்டன் பெனாண்டோ உள்ளிட்ட குற்றவாளிகளுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு மீண்டும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

இந்த வழக்கில் 45 பேர் சாட்சிகளாக பெயரிடப்பட்டுள்ளதுடன், அது தொடர்பான 09 ஆவணங்கள் சாட்சியங்களாக முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...