ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் ஜெனின் நகரில் இஸ்ரேலிய துருப்புகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பு தேடுதலின்போது பதின்ம வயது பலஸ்தீனர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
இதில் 17 வயதான அஜ்மல் அல் பயித் என்பவரே கொல்லப்பட்டிருப்பதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இஸ்ரேலிய துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான 18 வயது இளைஞர் ஒருவர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் அது குறிப்பிட்டுள்ளது.
இஸ்ரேலிய படையினர் ஜெனின் நகருக்கு வெளியில் இருக்கும் அகதி முகாமுக்குள் நுழைந்ததை அடுத்த மோதல் வெடித்ததாகவும் அல் பயிதின் உடலின் மேற் பகுதியில் பல துப்பாக்கி குண்டுகள் பாய்ந்ததாகவும் உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
Add new comment