ரஷ்யா - சீனா உறவு குறித்து மேற்குலக நாடுகள் கவலை

உக்ரைன் போருக்கு எதிராகக் கடுமையான பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டுள்ள சூழலில் ரஷ்யாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவில் ஏற்பட்டுவரும் வளர்ச்சி குறித்து மேற்குலக நாடுகள் பெரிதும் கவலை கொண்டுள்ளதாக ஜப்பானிய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, உக்ரைன் மீதான போருக்கு எதிராக மேற்குலக நாடுகள் விதித்துள்ள கடுமையான பொருளாதார தடைகளால் ரஷ்யா பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் அந்நாட்டுடன் சீனா உறவை வளர்ப்பது நிலைமை சிக்கலாக்கலாக்கும் நிலையை உருவாக்கியுள்ளது.

உக்ரைன் போருக்கு எதிராக ரஷ்யா மீது கடுமையான அழுத்தத்தைப் பிரயோகிப்பது குறித்து சர்வதேச சமூகம் கலந்துரையாடி வருவதோடு இந்தியா உள்ளிட்ட ஏனைய நாடுகளும் இது தொடர்பில் மீண்டும் வலியுறுத்தப்பட்டுமுள்ளன. இந்நிலையில், சீனாவும் ரஷ்யாவும் தங்களுக்கிடையிலான உறவில் சாத்தியமான மறுசீரமைப்பை மேற்கொள்வது கவலைகளை ஏற்படுத்துவதாக அதில் கூறப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...