'கணவரை எப்படிக் கொல்வது' என புத்தகம் எழுதியவர் கணவரைக் கொன்றதாகக் கைது

“கணவரை எப்படிக் கொல்வது” என்ற புத்தகத்தை எழுதிய அமெரிக்க எழுத்தாளர் நான்சி கிராம்ப்டன் புரோபி கணவனை கொன்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் 63 வயதான தனது கணவர் டேனியல் புரோபியை துப்பாக்கியால் சுட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.

71 வயது கிரேம்ப்டன் புரோபி பணப் பிரச்சினையில் சிக்கியிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. அவரது கணவனின் பெயரில் பல காப்பீடுகள் இருந்ததாகவும் அவர் இறந்தால் மொத்தம் 1.4 மில்லியன் டொலர் வழங்கப்படும் என்றும் அரசுத்தரப்பு வழக்கறிஞர் கூறினார்.

சமையல் வல்லுநராக வேலைசெய்த டேனியல் புரோபி சமையல் கல்லூரியின் வகுப்பு ஒன்றின் வெளியே கொல்லப்பட்டார். கிட்டத்தட்ட அதே நேரம் கிரேம்ப்டன் புரோபி சமையல் கல்லூரி வெளியே காணப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

கிரேம்ப்டன் புரோபி வைத்திருந்த அதே வகை துப்பாக்கியைக் கொண்டு தான் அவர் கொல்லப்பட்டார்.

ஆனால் தமது துப்பாக்கி காணாமல்போய்விட்டதாக கிரேம்ப்டன் புரோபி கூறினார். நிதி நெருக்கடியிலும் 10 காப்பீடுகளுக்கு அவர் தொடர்ந்து பணம் செலுத்திவந்தார்.


Add new comment

Or log in with...