பதுளை லுணுகலைப் பகுதியின் அடாவத்தை பெருந்தோட்டப் பிரிவைச் சேர்ந்த நான்கு பெண் தொழிலாளர்கள், குளவிக் கொட்டுக்கு இலக்காகி, லுணுகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவம் நேற்று (19) அடாவத்தை பெருந்தோட்டப் பிரிவில் இடம்பெற்றுள்ளது. அடாவத்தை பெருந்தோட்டப் பிரிவில் தேயிலை பறிக்கும் வேளையில் ஈடுபட்டிருந்த பெண் தொழிலாளர்கள் மீது, மரமொன்றிலிருந்த குளவிக் கூடு கலைந்து, பெண் தொழிலாளர்களை கொட்டியுள்ளன.
இச்சம்பவத்தில், பலர் குளவிக் கொட்டுக்கு இலக்கான போதிலும், ஆபத்தான நிலையிலுள்ள நான்கு பெண் தொழிலாளர்களே, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. வைத்தியசாலையில் அனுமதிக்கப்படாத பலர் ஆரம்ப சிகிச்சைகளைப் பெற்று வீடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(லுணுகலை நிருபர்)
Add new comment