Friday, May 20, 2022 - 6:00am
இன்று சமுகமளிக்கத் தேவையில்லையென அறிவிப்பு
அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய அரச ஊழியர்கள் இன்று வெள்ளிக்கிழமை கடமைக்கு சமுகமளிக்க வேண்டிய அவசியம் கிடையாதென பிரதமர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இன்று அரசதுறையில் அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய அரச ஊழியர்களை கடமைக்கு சமுகமளிக்க வேண்டாமெனக் கேட்டுக்கொள்கின்றேன். அது எரிபொருள் பிரச்சினைக்கு உதவியாக அமையுமென்றும் அவர் தெரிவித்தார்.
லோரன்ஸ் செல்வநாயகம், ஷம்ஸ் பாஹிம்
Add new comment