அமரகீர்த்தி அத்துகோரளவின் இடத்திற்கு ஜகத் சமரவிக்ரம

அமரகீர்த்தி அத்துகோரளவின் மரணம் காரணமாக வெற்றிடமான இடத்திற்கு SLPP பொலன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக, ஜகத் சமரவிக்ரம சபாநாயகர் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.

இன்றையதினம் (19) பாராளுமன்ற அமர்வு ஆரம்பமானதைத் தொடர்ந்து அவர் பாராளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.

கடந்த மே 09ஆம் திகதி நாட்டில் ஏற்பட்ட அமைதியின்மையின் போது, ஶ்ரீ லங்கா பொதுஜனப பெரமுன பொலன்னறுவை மாவட்ட உறுப்பினரான அமரகீர்த்தி அத்துகோரள கொலை செய்யப்பட்டிருந்தார்.

குறித்த சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...