குழந்தைகளுக்கான பால்மா பற்றாக்குறையைச் சரிசெய்வதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை கூறியுள்ளது.
அபோட் நிறுவனம் அதன் பால்மாவு உற்பத்தியை மீண்டும் ஆரம்பிக்க அமெரிக்க அதிகாரிகளுடன் ஒப்பந்தம் செய்திருப்பதாய்க் கூறியதை அடுத்து, அத்தகவல் வெளிவந்துள்ளது.
அமெரிக்காவில் பால்மா உற்பத்தி செய்யும் மிகப்பெரிய நிறுவனமாக அபோட் உள்ளது. கடந்த பெப்ரவரி மாதத்தில் நிறுவனத்தின் பால்மாவில் குறிப்பிட்ட பாக்டீரியா வகைகள் இருப்பதாகச் சந்தேகிக்கப்பட்டது. பால்மாவை உட்கொண்ட இரண்டு குழந்தைகள் உயிரிழந்தன.
சம்பவத்தைத் தொடர்ந்து அபோட், அதன் பால்மா வகைகளில் சிலவற்றை மீட்டுக்கொண்டது. பால்மாவின் உற்பத்தியையும் அது நிறுத்தியது.
ஏற்கனவே பொருள் விநியோகத் தொடரில் சிக்கல்கள் நீடிக்கும் வேளையில், அந்நடவடிக்கை பால்மாவுக்குக் கடும் பற்றாக்குறையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், மிச்சிகன் மாநிலத்தில் உள்ள அபோட் நிறுவனத்தின் மிகப் பெரிய உற்பத்தி ஆலையில் பணிகளை மீண்டும் ஆரம்பிக்க உடன்பாடு ஏற்பட்டுள்ளது. எனினும் நீதிமன்றம் அதற்கு முதலில் ஒப்புதல் அளிக்கவேண்டும். பால்மா இருப்பை அதிகரிக்க அமெரிக்கா கூடுதல் நடவடிக்கைகளை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Add new comment