பாரசீக மொழியை நீக்க தலிபான் அரசு உத்தரவு

ஆப்கானிஸ்தானின் உச்ச நீதிமன்ற சட்ட மூலத்தில் இருந்து பாரசீக மொழியை நீக்க தலிபான் ஆட்சியாளர்கள் உத்தரவிட்டுள்ளனர். தலிபான்கள் முன்னெடுக்கும் ஆட்சிக்கு உலகளாவிய ரீதியில் கண்டனங்கள் எழுந்துள்ள சூழ்நிலையில் அவர்கள் இக்கட்டளையைப் பிறப்பித்துள்ளனர் என்று ஏ.என்.ஐ தெரிவித்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் புதிய சட்டப்பட்டியல் பாஷ்டோ மற்றும் ஆங்கில மொழிகளில் மாத்திரமே எழுதப்பட்டுள்ளன. அத்தோடு உச்ச நீதிமன்றத்தின் பெயரும் அதிகார நீதித்துறை எனவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதேநேரம் பல்க் பல்கலைக்கழகம் உட்பட பல பெயர்ப்பலகைகளில் பயன்பாட்டில் இருந்த பாரசீக மொழியையும் தலிபான்கள் கடந்த சில மாதங்களுக்குள் நீக்கியுள்ளனர் என்று ஆப்கானிய ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

ஆப்கானில் உஸ்பெக் மொழியை வலுக்கட்டாயமாக நீக்கும் நடவடிக்கையையும் தலிபான்கள் ஏற்கனவே மேற்கொண்டமை தெரிந்ததே.


Add new comment

Or log in with...