சவூதி அரேபியாவில் மருத்துவர்கள், 15 மணி நேரச் சிக்கலான அறுவைச் சிகிச்சைக்குப் பின் ஒட்டிப் பிறந்த இரட்டையர்களை வெற்றிகரமாகப் பிரித்துள்ளனர்.
யெமனைச் சேர்ந்த யூசுப், யாசின் எனும் அந்த ஆண் குழந்தைகளின் சில உறுப்புகள் ஒட்டியிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. 4 கட்டங்களாக மேற்கொள்ளப்பட்ட அறுவைச் சிகிச்சையில் சுமார் 24 மருத்துவர்கள் ஈடுபட்டனர்.
சவூதி அரசாங்க ஆதரவாளர்களுக்கும், ஈரான் ஆதரவு ஹூத்தி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே யெமனில் 7 ஆண்டுகளாகச் சண்டை நடந்து வருகிறது. சவூதி அரேபியாவின், மன்னர் சல்மான் மனிதநேய உதவி, நிவாரண நிலையம் அவ்வப்போது யெமனுக்கு மனிதாபிமான உதவி வழங்குவது உண்டு.
ஒட்டிப் பிறந்த இரட்டையர்களுக்கு உதவும் திட்டத்திற்கு மன்னர் அதிக முக்கியத்துவம் அளிப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
Add new comment