முகநூலினூடாக அச்சுறுத்தல் விடுப்பு

சாமர எம்.பி பொலிஸில் முறைப்பாடு

முகநூல் ஊடாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை தொடர்பில் விசாரணை நடத்துமாறு பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் கடிதம் ஊடாக நேற்று முன்தினம் ஹாலி-எல பொலிஸாரிடம் அவர் முறைப்பாடொன்றை கையளித்துள்ளார். ஹாலி-எல, பண்டாரவளை வீதியில் வசிக்கும் ஒருவரால்,  இவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு அச்சுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 


Add new comment

Or log in with...