நாட்டில் தற்போது 4 மில்லியன் வெற்று சிலிண்டர்கள்

- நாளை முதல் தினமும் 80,000 சிலிண்டர்களே விநியோகம்

சீரற்ற காலநிலை காரணமாக நேற்றைய தினம் (17) திட்டமிட்டபடி கப்பலில் இருந்து எரிவாயுவை தரையிறக்க முடியாமல் போனதால் சந்தைக்கு எரிவாயுவை விநியோகிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

இன்றையதினம் (18) பாராளுமன்றத்தில் அவர் இதனைத் தெரிவித்தார்.

எனவே பாவனையாளர்கள் இன்றையதினம் சமையல் எரிவாயுவைப் பெற வரிசைகளில் காத்திருக்க வேண்டாமென அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

குறித்த விடயத்தை லிட்ரோ எரிவாயு நிறுவனமும் அறிவித்துள்ளது.

அத்துடன் நாளை முதல் சமையல் எரிவாயுவை விநியோகிக்க முடியும் எனவும் அதிலும் தினமும் 80,000 சிலிண்டர்களே இவ்வாறு விநியோகிக்க முடியுமெனவும் அவர் தெரிவித்தார்.

நாட்டில் 42 பிராந்திய விற்பனை முகவர்கள் உள்ளதோடு, அவர்களுக்கு 80,000 சிலிண்டர்கள் இவ்வாறு பிரித்துக் கொடுக்கப்படுமென அவர் தெரிவித்தார்.

இதேவேளை, நாட்டில் தற்போது 4 மில்லியன் லிட்ரோ சமையல் எரிவாயு வெற்று சிலிண்டர்கள் உள்ளதாக, அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

 

 


Add new comment

Or log in with...