குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இந்தியாவிலிருந்து 40 மில். உணவு பொருட்கள் வருகின்றன

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நிவாரணமாக ஒரு வார காலத்துக்கு தேவையான பால் மா உட்பட உலர் உணவுகள் அடங்கிய 40மில்லியன் உணவு பொதிகளை  இலங்கைக்கு அன்பளிப்பாக இந்திய அரசு வழங்கியுள்ளது. 

இந்தியா வழங்கியுள்ள இந்த அன்பளிப்பு பொதிகள் அடங்கிய முதல் தொகையை ஏற்றிய கப்பல், இன்று இலங்கையை வந்தடைய உள்ளதாக அத்தியவசிய உணவு விநியோகம் தொடர்பாக ஏற்பட்டுள்ள நெருக்கடி தொடர்பாக ஆராய பிரதமர் ரணில் விக்ரமசிங்க நியமித்த குழுவின் தலைவர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.  வடக்கு, கிழக்கு மாகாணம், பதுளை உட்பட நாட்டின் ஏனைய பகுதிகளில் வசிக்கும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இந்த உணவு பொதிகள் பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக உணவு உட்பட அத்தியவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. 

பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களை கவனத்தில் கொண்டு 40ஆயிரம் தொன் அரிசி, 500தொன் பால் மா, 137வகை உயிர்காக்கும் மருந்து உட்பட அத்தியவசிய பொருட்களை தமிழக அரசாங்கம், இந்திய ஒன்றிய அரசாங்கத்தின் ஊடாக இன்று இலங்கைக்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகளை செய்துள்ளது. 


Add new comment

Or log in with...