புதிய அரசில் ஸ்ரீ,சுகவுக்கு நான்கு முக்கிய அமைச்சுகள்

ரணில் – மைத்திரி சந்திப்பின் பின் முடிவு 

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய அரசாங்கத்தின் அமைச்சரவையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு நான்கு அமைச்சு பதவிகள் கிடைக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

எனினும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்குமிடையில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையின் பின்னர் புதிய அமைச்சரவையின் அமைச்சு பதவிகளை பெற்றுக்கொள்வது தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது. 

அதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டணியிலிருந்து விலகி பாராளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளதுடன் பதவிகள் எதனையும் பெற்றுக்கொள்வதில்லையென முடிவு செய்துள்ளனர். 

இந்த நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அதிகளவான பிரதிநிதிகளுக்கு அமைச்சு பதவிகள் வழங்கப்படவுள்ளன. 


Add new comment

Or log in with...