Wednesday, May 18, 2022 - 10:14am
சீரற்ற காலநிலை காரணமாக நேற்றைய தினம் (17) திட்டமிட்டபடி கப்பலில் இருந்து எரிவாயுவை தரையிறக்க முடியாமல் போனதால் சந்தைக்கு எரிவாயுவை விநியோகிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக, லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.
எனவே பாவனையாளர்கள் எரிவாயுவைப் பெற வரிசைகளில் காத்திருக்க வேண்டாமென லிட்ரோ கேஸ் நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
Add new comment