சகல எம்பிக்களினதும் வீடுகள், சொத்துக்களுக்கும் பாதுகாப்பு

சபாநாயகர் மஹிந்த யாப்பா நேற்று அறிவிப்பு

 

ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்ற பேதமின்றி அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அவர்களது வீடு மற்றும் சொத்துக்களுக்கும் உரிய பாதுகாப்பு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன நேற்று பாராளுமன்றத்தில்  தெரிவித்தார். இது தொடர்பில் பாதுகாப்பு செயலாளர் மற்றும் பொலிஸ் மா அதிபருக்கும் கடிதம் மூலம் அறிவித்துள்ளதாக சபையில் நேற்று தெரிவித்த சபாநாயகர், அதற்கான முன்னோடி நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று சபாநாயகரின் அறிவிப்பின் போது இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,

அண்மையில் இடம்பெற்றள குழப்பகரமான சூழ்நிலை மற்றும் வன்முறை சம்பவங்களையடுத்து, கட்சித் தலைவர்கள் தன்னிடம் கேட்டுக் கொண்டதற்கிணங்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த (09) இடம்பெற்றுள்ள வன்முறை சம்பவங்களின் போது பொலன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அத்துகோரல மரணமடைந்தார். அது தொடர்பில் எனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கின்றேன். வன்முறையை கைவிட்டு அனைவரும் ஒற்றுமையாக செயற்படுமாறு மீண்டும் நான் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.

கட்சி பேதமின்றி நாடு, மக்கள் என சிந்தித்து அனைவரும் செயற்பட வேண்டியது அவசியம் என்பதையும் வலியுறுத்த விரும்புவதாகவும் சபாநாயகர் மேலும் தெரிவித்தார்.

 

 லோரன்ஸ் செல்வநாயகம், ஷம்ஸ் பாஹிம்


Add new comment

Or log in with...