பாராளுமன்ற வளாகத்தில் அந்நியர் குழு நுழைவு

கண்டறியுமாறு சன்ன ஜயசுமன கோரல்

பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற பணியாளர் அல்லாத அந்நிய குழுவொன்று பாராளுமன்ற வளாகத்துக்குள் பிரவேசித்ததாக முன்னாள் அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.  பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பணியாளர் அல்லாத அந்நியர் சிலர் பாராளுமன்ற வளாகத்துக்குள் நுழைந்து கையடக்க தொலைபேசியில் புகைப்படங்களையும் காணொளிகளையும் எடுத்ததாக அவர் தெரிவித்தார்.

இதனால், சிலர் பாராளுமன்றுக்குள் வருவதற்கு அச்சமடைவதாகவும், பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை கவனத்தில் கொண்டு அந்த நபர்கள் யார்? என்பதை கண்டறிந்து நடவடிக்கைகளை எடுக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

 

 

லோரன்ஸ் செல்வநாயகம், ஷம்ஸ் பாஹிம்


Add new comment

Or log in with...