ஜனாதிபதியின் செயற்பாடுகளுக்கு அதிருப்தி தெரிவிக்கும் பிரேரணையை கொண்டு வருவது நிராகரிப்பு

- ஆதரவு 119; எதிர்ப்பு 68

நிலையியற் கட்டளைகளை இடைநிறுத்தி ஜனாதிபதியின் செயற்பாடுகளுக்கு அதிருப்தி தெரிவிக்கும் பிரேரணையை விவாதத்திற்கு எடுத்துக்கொள்வது மேலதிக வாக்குகளால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனால் குறித்த பிரேரணை கொண்டு வரப்பட்ட நிலையில் அது 51 வாக்குகளால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

குறித்த பிரேரணைக்கு ஆதரவாக 119 பேரும், எதிர்ப்பாக 68 பேரும் வாக்களித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...