வடகொரியாவில் கொவிட் தீவிரம்

வடகொரியாவில் மேலும் 296,000க்கும் மேற்பட்டோருக்குக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. ஆனால் அவர்களில் எத்தனை பேருக்கு கொவிட்–19 ஏற்பட்டுள்ளது என்பது தெரியவில்லை.

மேலும் 40க்கும் மேற்பட்டோர் வட கொரியாவில் உயிரிழந்திருப்பதாகக் கூறப்படுகிறது. அத்தனை பேர் பாதிக்கப்பட்டிருப்பதால், வைரஸ் தொற்றுப் பரிசோதனைகள் மேற்கொள்வது கடினமாக இருக்கும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.

உண்மையிலேயே கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகமாக இருக்கக்கூடுமென்று நம்பப்படுகிறது.

வடகொரியாவைத் தோற்றுவித்த நாளிலிருந்து மிக மோசமான நெருக்கடியை எதிர்நோக்குவதாக அதன் தலைவர் கிம் ஜொங் உன் கூறியுள்ளார்.


Add new comment

Or log in with...