3 நாட்களுக்கு எரிபொருளுக்காக வரிசைகளில் நிற்க வேண்டாம்

- இந்தியாவிடமிருந்து இதுவரை 400,000 மெ.தொன்னிற்கும் அதிக எரிபொருள்

எதிர்வரும் 3 நாட்களுக்கு எரிபொருளுக்காக வரிசையில் நிற்க வேண்டாமென, மின்சக்தி, வலு சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் தனது ட்விட்டர் கணக்கில் பதிவிட்டுள்ள அவர் இவ்வாறு அறிவித்துள்ளார்.

 

 

டீசல் கப்பலொன்று நேற்று (15) இலங்கையை வந்தடைந்துள்ளதோடு, இந்திய கடன் திட்டத்தின் கீழ் 2 வாரங்களில் மேலும் 3 கப்பல்கள் வரவுள்ளதாக தெரிவித்துள்ள அவர், நாட்டில் உள்ள 1,190 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருளை விநியோகிக்கும் வரை, எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்காக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசைகளில் காத்திருக்க வேண்டாமெனவும், இதன் மூலம் போதிய எரிபொருளை விநியோகிக்க முடியுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, இந்தியாவிடமிருந்து 12 தொகுதிகளாக 400,000 மெட்ரிக் தொன்னுக்கும் அதிகமான எரிபொருள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக, இந்திய உயர் ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.

 

 

எரிபொருளுக்காக ஒதுக்கப்பட்ட கடனுதவித் திட்டத்தின் கீழ், மற்றுமொரு எரிபொருள் தொகுதியுடன்  Torm Helvig எனும் கப்பல் நேற்றைய தினம் (15) கொழும்பை வந்தடைந்ததாக தூதரகம் விடுத்துள்ள ட்விட்டர் பதவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...