“காலி முகத்திடல் ஆர்ப்பாட்டம்" தேவைகளை அறிவதற்கு குழுவை அமைத்த பிரதமர்

ரோஸி, ருவன் அடங்கலாக பலர் குழுவில்

'காலி முகத்திடல் ஆர்ப்பாட்ட" த்தில் ஈடுபடுபவர்களின் தேவையை அறிந்து செயற்படும் வகையில் பிரதமர் குழுவொன்றை நியமித்துள்ளார்.

காணொளியொன்றை வெளியிட்டு உரையாற்றுகையிலேயே

தேவைகளை...

பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கொழும்பு மேயர் ரோசி சேனாநாயக்க, ருவான் விஜேவர்தன மற்றும் சுகாதார அமைச்சு, இராணுவம் மற்றும் பொலிஸ் பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர் இக்குழுவில் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் தேவைகளை அறிந்து அவற்றை நிவர்த்தி செய்யுமாறும் தேவைகளை ஆராயுமாறும் குறித்த குழுவினருக்கு பிரதமர் பணித்துள்ளார்.

போராட்டம் நடத்தும் இளைஞர்கள் முன்வைக்கும் நிபந்தனைகளின் அடிப்படையில் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாகவும், போராட்டத் தளங்கள் மீது அடக்குமுறை செயற்பாடுகள் நடைபெறாது என்றும் பிரதமர் உறுதியளித்தார்.

இதேவேளை அடுத்த இரு வாரங்களே எமக்கு மிகவும் தீர்க்கமான வாரங்களாக அமையப் போகின்றன. உலக நாடுகளின் தலைவர்கள் மற்றும் தூதுவர்களுடன் நான் எமது நாட்டின் பொருளாதார நிலை குறித்து கலந்துரையாடி வருகிறேன். அவர்களின் வெளிப்பாடுகள் சிறந்ததாக அமைந்தன.

இதேவேளை, நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து நாளை விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


Add new comment

Or log in with...