அரசியல் ஏலத்தில் SJB எம்.பிக்கள் விற்பனைக்கு இல்லை

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அவர்களுக்கான மக்கள் ஆணையை ஏலத்தில் விட தயாராக இல்லை. எமது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தில் இணையவுள்ளதாக போலியான செய்திகளை வெளியிட்டு சர்வாதிகாரத்தை பாதுகாப்பதற்காக செயற்பட வேண்டாம் என்று

ஊடகங்களிடம் கேட்டுக் கொள்வதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

விசேட அறிவிப்பொன்றை விடுத்து இதனைத் தெரிவித்துள்ள அவர் அதில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது :

ஐக்கிய மக்கள் சக்தி , ஐக்கிய மக்கள் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பணத்துக்கு விற்கப்பட மாட்டார்கள். அரசியல் துறையில் ஏலம் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் , ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அவர்களின் மக்கள் ஆணையை ஏலத்தில் விட தயாராக இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


Add new comment

Or log in with...