போர்ட்டோ ரிக்கோவில் படகு கவிழ்ந்து 11 பேர் பலி

போர்ட்டோ ரிக்கோவின் கடலோரப் பகுதியில் படகு ஒன்று கவிழ்ந்ததில் குறைந்தது 11 பேர் உயிரிழந்ததாக அமெரிக்கக் கடலோரக் காவற்படை கடந்த வியாழனன்று தெரிவித்தது.

படகில் இருந்த 31 பேர் காப்பாற்றப்பட்டதாகவும் அது டுவிட்டரில் குறிப்பிட்டது.

அவர்களில் 11 பேர் பெண்கள், 20 பேர் ஆண்களாவர்.

உயிரிழந்த 11 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. டெசிசியோ தீவிலிருந்து வடக்கே 16 கிலோமீற்றர் தொலைவில் படகு கவிழ்ந்ததாக அமெரிக்கச் சுங்கத்துறை, எல்லைப் பாதுகாப்புப் பேச்சாளர் ஒருவர் கூறினார்.

காப்பாற்றப்பட்டவர்களில் பெரும்பாலோர் ஹெயிட்டி அல்லது டோமினிக்கன் குடியரசைச் சேர்ந்தவர்கள் என்று அவர் குறிப்பிட்டார். கவிழ்ந்த படகு சட்டவிரோதப் பயணத்தில் ஈடுபட்டதாய்ச் சந்தேகிக்கப்பட்டதாக அமெரிக்கக் கடலோரக் காவற்படை முன்பு கூறியிருந்தது.

கடலில் உயிர்க்காப்புக் கவசம் அணியாத பலரையும் கவிழ்ந்த படகையும் ஹெலிகொப்டர் ஒன்று கண்டுபிடித்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

தேடல், மீட்புப் பணிகளுக்காகப் பல ஹெலிகொப்டர்கள் அனுப்பப்பட்டன.


Add new comment

Or log in with...