கரவெட்டி வலைப்பந்தாட்டத்தில் நவஜீவன்ஸ் அணி சம்பியன்

கரவெட்டி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கிடையிலான பெண்களுக்கான வலைப்பந்தாட்டப் போட்டியில் உடுப்பிட்டி நவஜீவன்ஸ் அணி சம்பியன் ஆனது.

அண்மையில் வதிரி டைமன்ஸ் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற. இறுதியாட்டத்தில் உடுப்பிட்டி நவஜீவன்ஸ் அணியை எதிர்த்து சிவகுமரன் அணி மோதியது. ஆட்டம் ஆரம்பம் முதல் இறுதி வரை இரு அணிகளும் ஒன்றுக்கொன்று சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் விளையாடிக் கொண்டிருந்தனர்.

இதனால் இரு அணிகளும் மாறி மாறி புள்ளிகளைப் பெற்று சமபலத்துடன் மோதினர். இருப்பினும் ஆட்ட நேர முடிவில் உடுப்பிட்டி நவஜீவன்ஸ் அணி 14:11 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுச் சம்பியன் ஆனது.

(யாழ். விளையாட்டு நிருபர்)


Add new comment

Or log in with...