ஜனாதிபதி-அரச எம்.பிக்கள் இன்று விசேட சந்திப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கும், அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்திய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் இன்றைய

தினம் விசேட சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது. முற்பகல் 10 மணிக்கு இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாட்டின் தற்போதைய நிலைமை மற்றும் பாராளுமன்றத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்தல் என்பன குறித்து இதன்போது கலந்துரையாடப்பட உள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 9 ஆம் திகதி நாட்டில் ஏற்பட்ட அமைதியின்மையை அடுத்து, ஜனாதிபதிக்கும், அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையே இடம்பெறவுள்ள முதலாவது சந்திப்பு இதுவாகும்.

லோரன்ஸ் செல்வநாயகம்


Add new comment

Or log in with...