காற்பந்து சுற்றுப் போட்டியில் சுப்பர்சொனிக்; விளையாட்டுக் கழக அணி சம்பியன்

அட்டாளைசசேனை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கழகங்களுக்கிடையிலான காற்பந்து சுற்றுப் போட்டியில், அட்டாளைச்சேனை சுப்பர்சொனிக் விளையாட்டுக் கழகம் 1:0 என்ற கோல் அடிப்படையில் வெற்றியீட்டி, சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டது.

அட்டாளைச்சேனை அஷ்ரஃப் ஞாபகார்த்த பொது விளையாட்டு தைமானத்தில், அட்டாளைசசேனை பிரதேச செயலக விளையாட்டுப் பிரிவின் ஏற்பாட்டில் நடைபெற்ற காற்பந்து இறுதிப் போட்டியில்;, சுப்பர்சொனிக் விளையாட்டுக் கழக அணியினரும், எவர்டொப் விளையாட்டுக்கழக அணியினரும் மோதினர்.

அட்டாளைச்சேiனை பிரதேச செயலாளர் எம்.ஏ.சி.அஹமட் சாபிரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில், விளையாட்டு உத்தியோகத்தர் எம்.எச்.அஷ்வத் காற்பந்து சுற்றுப் போட்டியை ஏற்பாடு செய்திருந்தார்.

இறுதிப் போட்டியில் இரு அணிகளின் வீரர்களும் சிறப்பாக விளையாடி தங்களது திறமையை வெளிக்கொணர்ந்தனர். போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது. அட்டாளைச்சேனை பிரதேச கழகங்களுக்கிடையிலான விளையாட்டு விழா-2022, காற்பந்து சுற்றுப் போட்டியில் வெற்றியீட்டியுள்ள சுப்பர்சொனிக் விளையாட்டுக் கழகம் மாவட்ட மட்ட காற்பந்து சுற்றுப் போட்டியில் பங்குபற்றவுள்ளது.

(அட்டாளைச்சேனை மத்திய நிருபர்)


Add new comment

Or log in with...