வெசாக் பௌர்ணமி தினத்தில் மின்வெட்டு இல்லை

எதிர்வரும் வெசாக் பௌர்ணமி தினத்தில் மின் வெட்டு அமுல்படுத்தப்படாது என, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இன்றையதினம் (13) இடம்பெற்ற ஊடவியலாளர் சந்திப்பின் போது, இலங்கை பொதுப் பயன்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க இதனைத் தெரிவித்தார்.

ஆணைக்குழுவானது விசேட தினங்களில் மின்வெட்டை தவிர்க்க நடவடிக்கை எடுத்து வந்துள்ளதாகவும், கடந்த பெருநாள் தினம் மற்றும் பெரிய வெள்ளிக்கிழமை தினங்களில் இவ்வாறு மின்வெட்டு அமுல்படுத்தப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டினார்.

இதேவேளை நாளையதினம் (14) ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டால் 3 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களும் ஊரடங்கு அமுல்படுத்தப்படாவிட்டால் 5 மணித்தியாலங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதற்கமைய, நாளை (14) மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

நாட்டை 27 வலயங்களாக (A,B,C,D,E,F,G,H,I,J,K,L | P,Q,R,S,T,U,V,W | MNO | XYZ | CC) பிரித்து ஒவ்வொரு வலயத்திலும் உள்ள பிரதேசங்களில்,

மே 13 - 14:

ஊரடங்கு நீக்கப்பட்டால் இரு கட்டங்களில் 5 மணித்தியாலங்கள்

ABCDEFGHIJKL | PQRSTUVW :
 - மு.ப. 8.00 - பி.ப. 6.00 வரை 3 மணித்தியாலங்கள் 20 நிமிடங்கள்
 - பி.ப. 6.00 - இரவு 9.00 வரை 1 மணித்தியாலம் 40 நிமிடங்கள்

MNO | XYZ  :
 - மு.ப. 5.00 - மு.ப. 8.00 வரை 3 மணித்தியாலங்கள்

CC :
 - மு.ப. 6.00 - மு.ப. 9.00 வரை 3 மணித்தியாலங்கள்

ஊரடங்கின் போது : இரு கட்டங்களில் 3 மணித்தியாலங்கள் 20 நிமிடம்/ 5 மணித்தியாலங்கள்:

ABCDEFGHIJKL | PQRSTUVW :
 - மு.ப. 9.00 - பி.ப. 5.00 வரை 2 மணித்தியாலங்கள்
 - பி.ப. 5.00 - இரவு 9.00 வரை 1 மணித்தியாலம் 20 நிமிடங்கள்

MNO | XYZ  :
 - மு.ப. 5.00 - மு.ப. 8.00 வரை 3 மணித்தியாலங்கள்

CC :
 - மு.ப. 6.00 - மு.ப. 9.00 வரை 3 மணித்தியாலங்கள்

மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

போதிய எரிபொருள் இன்மை காரணமாக இலங்கை மின்சார சபையினால் விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோளுக்கிணங்க இவ்வாறு திட்டமிட்ட மின்வெட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.

(மின்வெட்டு பிரதேச பட்டியல் விரைவில் இணைக்கப்படும்)


Add new comment

Or log in with...