நம்பிக்கையில்லா விவாதம் மே 17இல்

ஜனாதிபதி மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் பாராளுமன்றில் 17 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ளது. 17ஆம் திகதி பாராளுமன்றத்தில் ஜனாதிபதியின் மீதான “விருப்பின்மை” (நம்பிக்கையில்லா) தீர்மான விவாதத்தை நிலையியல் கட்டளைகளை ஒத்திவைத்து நடத்த நேற்று (12) காலை இடம்பெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

பாராளுமன்றம் அன்று கூடும்போது முதல் நடவடிக்கையாக, பிரதி சபாநாயகர் தெரிவும், பின்னர் நிலையியல் கட்டளைகள் ஒத்திவைப்பும், அதையடுத்து ஜனாதிபதி மீதான நம்பிக்கையில்லா தீர்மானமும் விவாதிக்கப்பட்டு இறுதியில் வாக்கெடுப்பும் நடத்தப்படவுள்ளது.

(லோரன்ஸ் செல்வநாயகம்)


Add new comment

Or log in with...