- பிரதமர் ரணிலுக்கு 4ஆவது முறையாக செயலாளராக நியமனம்
பிரதமரின் செயலாளராக ஈ.எம்.எஸ்.பி. ஏக்கநாயக்க, இன்று (12) பிற்பகல் கோட்டை ஜனாதிபதி மாளிகையில், ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத்திடமிரருந்து தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார்.
சமன் ஏக்கநாயக்க, இலங்கை நிர்வாக சேவையில் விசேட தர ஓய்வுபெற்ற அதிகாரி ஆவார். 2015 - 2019 காலப்பகுதியில் மூன்று தடவைகள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் செயலாளராக கடமையாற்றிய அவர், நான்காவது தடவையாகவும் அப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
ஈ.எம்.எஸ்.பி. ஏக்கநாயக்க, பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தனது முதல் பட்டத்தையும், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் பொது நிர்வாகத்தில் முதுகலைப் பட்டத்தையும் பெற்றவராவார். இவர் தனது 30 வருடங்களுக்கும் அதிகமான நிர்வாக சேவையில், இளைஞர் விவகாரம், விளையாட்டு, சமுர்த்தி, வீடமைப்பு, கைத்தொழில், வெளிவிவகார மற்றும் நிதி ஆகிய அமைச்சுக்களிலும், மலேசியா மற்றும் இலண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயங்களிலும் சேவையாற்றியுள்ளார்
Add new comment