இலங்கை கலவரம்: பிரதேச சபை தலைவர் ஏ.வி. சரத் குமார மரணம்; இதுவரை 7 மரணங்கள்

- அரசியல்வாதிகளின் வீடுகளுக்கு சேதம்
- கோட்டா கோ கம, மைனா கோ கம தாக்குதல் விசாரணைகள் CID யிடம்

Imageஇமதூவ பிரதேச சபையின் தவிசாளர் A.V. சரத் குமார, அவரது இல்லத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.

நேற்று இரவு இடம்பெற்ற இச்சம்பவத்தை தொடர்ந்து பிரதேச சபைத் தலைவர் ஏ.வி. சரத் குமார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இலங்கையில் நேற்றைய தினம் (09) முதல் இடம்பெற்று வரும் அமைதியின்மை காரணமாக இதுவரை SLPP பொலன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள உள்ளிட்ட 7 பேர் மரணித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவங்களில் 200 இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, நேற்றிரவு அலரி மாளிகைக்கு அருகில் இடம்பெற்ற அமைதியின்மையின் போது கண்ணீர் புகை துப்பாக்கி வெடித்ததில் பொலிஸ் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

24 வயதான குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்றையதினம் (10) அலரி மாளிகைக்கு வந்த ஶ்ரீ லங்கா பொது ஜன பெரமுன கட்சி ஆதரவாளர்கள் திட்டமிட்டு தூண்டப்பட்டு, அமைதியாக இடம்பெற்று வந்த 'மைனா கோ கம' மற்றும் 'கோட்டா கோ கம' போராட்டக் களத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் எதிரொலியாக, நாடு முழுவதும் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு வந்த பொதுமக்களால் இவ்வாறு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இச்சம்பவத்தில் சுமார் 30 எம்.பிக்களின் வீடுகள் அவர்களது சொத்துகள், வாகனங்கள் உள்ளிட்டவை எரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்றைய 'கோட்டா கோ கம' போராட்டக் கள தாக்குதலைத் தொடர்ந்து அதற்காக வந்த சிலரை பொதுமக்கள் தடுத்து வைத்து மேற்கொண்ட விசாரணைகளில், தாங்கள் சிறைக்கைதிகள் என அவர்களால் தெரிவிக்கப்படும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், 'கோட்டா கோ கம', 'மைனா கோ கம' தாக்குதல் விசாரணைகள் குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் (CID) ஒப்படைக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

அரசியல்வாதிகளின் வீடுகளுக்கு சேதம்

இந்திக அனுருத்த எம்.பியின் அநுராதபுரம் அலுவலகம்

 


மஹிந்த ராஜபக்ஷ எம்.பியின் குருணாகல் வீடு


காமினி லொக்குகே எம்.பியின் வீடு


மெதமுலன ராஜபக்‌ஷ அருங்காட்சியகம்


ஜனக பண்டார தென்னகோனின் தம்புள்ளை வீடு


நிமல் லன்சா எம்.பியினது தெரிவிக்கப்படும் நீர்கொழும்பு எவன்ட்ரா ஹோட்டல்


அலரி மாளிகையின் பின்னால் உள்ள பகுதி


ரோஹித அபே குணவர்தன எம்.பியின் வீடு


குருணாகல் நகரசபை தலைவரின் வீடு


பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் வீடு


சனத் நிஷாந்த எம்.பியின் வீடு


திஸ்ஸ குட்டியாரச்சி எம்.பியின் வீடு


மொரட்டுவை நகர சபை தலைவர் சமன்லால் பெனாண்டோவின் வீடு

பின்வரும் அரசியல்வாதிகளின் வீடுகள், சொத்துகள் சேதமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது...

அந்த அரசியல்வாதிகள்/ சொத்துகளின் பட்டியல்,

  • மெதமுலன வீடு
  • மஹிந்த ராஜபக்‌ஷ குருணாகல் வீடு
  • சம்பத் அத்துகோரள
  • சிறிபால கம்லத்
  • திஸ்ஸ குட்டியாச்சி
  • ஜனக பண்டார தென்னகோன்
  • ரமேஷ் பத்திரண
  • நைனாமடம ட்ரெவின் பெனாண்டோ இல்லம்
  • பிரசன்ன ரணதுங்க
  • கனக ஹேரத்
  • அருந்திக பெனாண்டோ
  • ஷெஹான் சேமசிங்க
  • ஜோன்ஸ்டன் பெனாண்டோ
  • மொரட்டுவ மேயர் மாளிகை
  • சனத் நிஷாந்த
  • அனுஷா பாஸ்குவல்
  • காமினி லொக்குகே
  • கஞ்சனா விஜேசேகர
  • துமிந்த திஸாநாயக்க
  • விமல் வீரவன்ச
  • நிபுண ரணவக்க
  • குணபால ரத்னசேகர
  • சன்ன ஜெயசுமண
  • ரேணுகா பெரேரா இல்லம்
  • மிலான் ஜயதிலக
  • சாந்தபண்டார
  • சஹபந்து சூப்பர் சென்டர் காலி
  • அகில எல்லாவல
  • நிமல் லான்சா
  • கிராண்ட் டீசா ஹோட்டல், நீர்கொழும்பு
  • அவேந்திரா கார்டியன் ஹோட்டல்
  • அலி சப்ரி ரஹீம் வீடு
  • ரோஹித அபேகுணவர்தன
  • பந்துல குணவர்தன
  • சஹான் பிரதீப்
  • மொனான் டி சில்வா
  • துமிந்த சில்வா
  • மஹிந்தானந்த அளுத்கமகே
  • கோகிலா குணவர்தன
  • கெஹெலிய ரம்புக்வெல்ல
  • டான் பிரியசாத்
  • டி.பி. ஹேரத்
  • அசோக பிரியந்த
  • பிரசன்ன ரணவீர
  • சமல் ராஜபக்ஷ
  • ரஞ்சித் சியம்பலாபிட்டிய
  • டபிள்யூ.டி. வீரசிங்க அம்பாறை
  • கீதா குமாரசிங்க
  • சமன்பிரிய ஹேரத்
  • லக்ஷ்மன் பெரேரா
  • இந்துனில் ஜகத் குமார

Add new comment

Or log in with...