உக்ரைனுக்கு இந்தியா மனிதாபிமான உதவிகள்

தற்போது இடம்பெற்று வரும் உக்ரைன் மற்றும் ரஷ்ய போருக்கு மத்தியில் உக்ரைனுக்கு அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களைக் கொண்ட 7,775 கி.கி மனிதாபிமான உதவிகளை இந்தியா வழங்கியுள்ளது.

புதிதாக நியமிக்கப்பட்ட உக்ரைனுக்கான இந்திய தூதுவர் ஹார்ஷ் குமார் ஜெயின், உக்ரைனிய பிரதி சுகாதார அமைச்சருக்கு இந்த உதவிகளை கையளித்தார்.

கடந்த மார்ச் மாதத்தில் இந்தியா 90 தொன் நிவாரண உதவிகளை உக்ரைனுக்கு வழங்கியதாகவும் அதிக மருந்துகளை வழங்க அவதானம் செலுத்துவதாகவும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்தார்.


Add new comment

Or log in with...