இந்தியா - டென்மார்க் இடையே பசுமை மூலோபாயத் திட்டம்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி டென்மார்க்குக்கு மேற்கொண்ட இராஜதந்திர விஜயத்தின் ஊடாக இந்தியா–டென்மார்க் பசுமை மூலோபாய கூட்டாண்மையில் புதியதொரு அத்தியாயம் ஆரம்பமாகியுள்ளதாகவும் இரு நாடுகளுக்கும் பரஸ்பரம் நன்மை பயக்கும் ஒத்துழைப்பின் இலட்சிய நிகழ்ச்சி நிரலாக அமைந்துள்ளதாகவும் இந்திய வெளிவிவகார செயலாளர் வினாய் குவாத்ரா தெரிவித்துள்ளார்.

டென்மார்க்குக்கான விஜயத்தை தொடர்ந்து பல உயர்மட்ட பேச்சுவார்தைகள் இருநாட்டுப் பிரதிநிதிகளுக்கும் இடையில் இடம்பெற்றுள்ளன.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இந்திய வெளிவிவகாரச் செயலாளர், “பிரதமர் மோடியும் டென்மார்க் பிரதமர் மெட்டே பிரடெரிக்சனும் முழு அளவிலான இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் உலகளாவிய, பிராந்திய நலன்கள் குறித்தும் விரிவாகக் கலந்துரையாடினர். இவ்விஜயத்தின் ஊடாக இந்தியா–டென்மார்க் பசுமை மூலோபாயக் கூட்டாண்மையில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது. இது இரு நாடுகளது பொருளாதாரங்களுக்கும் சமூகங்களுக்கும் பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்பின் ஒரு இலட்சிய நிகழ்ச்சி நிரலாக அமையும்“ என்றுள்ளார்.


Add new comment

Or log in with...