குருணாகல், அநுராதபுரம் வைத்தியசாலைகளுக்கு சொந்துரு திரியவந்தி திட்டத்தின் கீழ் இயற்கையான சிகை பொதிகள்

குருணாகல் வைத்தியசாலையில் நன்கொடை வழங்கும் நிகழ்வின் போது (இடமிருந்து வலமாக): இந்திரா புற்றுநோய் அறக்கட்டளையின் பிரதிநிதிகள், பயனாளியான திருமதி இனோகா தம்பதெனிய, புற்றுநோயியல் மருத்துவ நிபுணர் வைத்தியர் ரொஷான் குணரத்ன, புற்றுநோயியல் மருத்துவ நிபுணர் வைத்தியர் லீலா சிறிவர்தன, புற்றுநோயியல் மருத்துவர் ரேணுகா ஜயசிங்க MO, புற்றுநோயியல் மருத்துவர் பிரகீத் விக்கிரமசிங்க MO, புற்றுநோயியல் மருத்துவர் விதுர கீர்த்திசிங்க, MO, புற்றுநோயியல் மருத்துவர் கௌசல்யா திஸாநாயக்க MO, புற்றுநோயியல் மருத்துவர் திருமதி P.S.S.N. தனரத்ன RN, வார்ட் தாதி திருமதி A.R.M.T. சுவாஹிர் RN.

2015 முதல் 2020 ஆம் ஆண்டு வரையான ஐந்து வருட காலப்பகுதியில் இலங்கையில் 75,909 புற்றுநோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். இவ்வாறு கண்டறியப்பட்டவர்களில் 57% ஆனோர் பெண்களாவர். இவ்வாறு நோய்வாய்ப்படுபவர்கள் கீமோதெரபி சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளதோடு, இதன் பிரதான பக்க விளைவாக ‘முடி உதிர்தல்’ பிரச்சினை காணப்படுகின்றது.

இந்நிலைமையை சந்திக்கும் பெண்களுக்கு ஏற்படும் உளவியல் ரீதியான பிரச்சினைகளை உணர்ந்து, ‘முடி உதிர்தல்’ காரணமான சமூக பிரச்சினைகளை களைவதற்காக, இலங்கையின் முன்னணி கூந்தல் பராமரிப்பு வர்த்தகநாமமான குமாரிகா, ‘சொந்துரு திரியவந்தி’ எனும் வேலைத் திட்டத்தை முன்னெடுத்துள்ளது. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இயற்கையான கூந்தலினால் அமைக்கப்பட்ட சிகைகளை வழங்கும் வகையில் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் நன்கொடை வழங்கும் நிகழ்வின் போது (இடமிருந்து வலமாக): புற்றுநோயியல் மருத்துவ நிபுணர் வைத்தியர் மஹேசன் நெத்திகுமார, கீமோதெரபி பிரிவின் பொறுப்பதிகாரி திருமதி அனுஷ் தரங்கனி, பயனாளியான திருமதி லக்மினி வீரசிங்க மற்றும் இந்திரா புற்றுநோய் அறக்கட்டளை பிரதிநிதிகள்.

கடந்த 2021 ஒக்டோபர் 05ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டமானது, பெண்ணானவள் அவளது தோற்றம் எவ்வாறாக இருந்தபோதிலும், ஒவ்வொரு பெண்ணும் அழகானவள் எனும் அடிப்படையான நம்பிக்கையுடன் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் இதன் மூலம் புற்றுநோய் கண்டறியப்பட்ட பெண்களுக்கு வருடாந்தம் 6,000 சிகைகளை அன்பளிப்பாக வழங்க குமாரிகா திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த, குமாரிக்காவுடன் இந்திரா புற்றுநோய் அறக்கட்டளை, அலுத்கம, பெந்தோட்டை மற்றும் கல்கிஸ்ஸை லயன்ஸ் கிளப், சுகாதார அமைச்சு, இலங்கை புற்றுநோயியல் நிபுணர்கள் கல்லூரி ஆகியன கூட்டுச் சேர்ந்துள்ளன. கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பரில் முதன் முதலாக கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலைக்கு இந்நன்கொடை வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, 2021 நவம்பர் 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் முறையே குருணாகல் வைத்தியசாலை மற்றும் அநுராதபுரம் வைத்தியசாலைகளுக்கு இந்நன்கொடைகள் வழங்கப்பட்டன.

சொந்துரு திரியவந்தி திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் உள்ள பல்வேறு தேசிய, பொது, ஆதார, போதனா வைத்தியசாலைகளுக்கு 50 சிகை பராமரிப்பு பொதிகள் வழங்கப்பட்டுள்ளன.


Add new comment

Or log in with...