வெற்றிகரமாக ஹேக்கத்தான் சவாலை நிறைவேற்றியுள்ள AIA இன்ஷுரன்ஸ்

AIA இன்ஷுரன்ஸ் காப்புறுதித் துறையில் முதன் முறையாக 'AIA ஸ்ரீலங்கா ஹேக்கத்தான் சவால் 2021' இனை வெற்றிகரமாக நடத்தியிருந்தது. 'ஹேக்கத்தான் சவால் 2021' கடந்த வருடம் செப்டெம்பர் 19 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு இலங்கை மற்றும் சர்வதேச நிதியியல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் காப்புறுதித் தொழில்நுட்ப நிறுவனங்களின் மகத்தான வெற்றிக்கு இடமளிக்கும் வகையில் 2022 மார்ச் 09 ஆம் திகதி நிறைவு செய்யப்பட்டிருந்தது.

ஹேக்கத்தான் நிகழ்வானது AIA இனால் ஏற்பாடு செய்யப்பட்டு நடாத்தப்பட்டிருந்ததுடன், ASEAN நிதியியல் புத்தாக்க வலையமைப்பு ((AFIN), சமூக விளைவு முயற்சியானது சிங்கப்பூர் நாணய ஆணையம், சர்வதேச நிதிக் கூட்டுத்தாபனம், (IFC), ASEAN வங்கியாளர்கள் சங்கம் ஆகியவற்றுடனான கூட்டாண்மையுடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேலும் இந்த நிகழ்வானது நிதியியல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் நிதியியல் நிறுவனங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பிற்காக AFIN, உலகின் முதலாவது குறுக்கு எல்லை, திறந்த கட்டமைப்பு API சந்தை மற்றும் சாண்ட்பொக்ஸ் தளம் ஆகியவற்றின் முயற்சியுடன் API பரிமாற்று தளத்தில் நடாத்தப்பட்டிருந்தது. IFC உடன் இணைந்து APIX தளத்தில் ஹேக்கத்தான் சவாலை ஆரம்பிக்கும் இலங்கையின் முதலாவது நிறுவனமாக AIA திகழ்கின்றது.

ஹேக்கத்தான் சவாலின் ஐந்து மாதப் பயணத்தின் பின்னர் இரண்டு வெற்றியாளர்கள் 5000 அமெரிக்க டொலர் பணப்பரிசினை வெற்றி பெற்றிருந்ததுடன், இந்த நிறுவனங்கள் AIA இன் தொழில்நுட்பம், டிஜிட்டல் மற்றும் பகுப்பாய்வு பயணத்தில் ஒரு அங்கமாக இருப்பதன் மூலம் காப்புறுதித் துறையினை மாற்றியமைக்கும் தீர்வுகளுக்கு முன்னோடியாகுவதற்கான வாய்ப்பினையும் பெற்றுக் கொள்ளும். AIA பிரதான நிறைவேற்று அதிகாரி நிகில் அத்வானி கருத்துத் தெரிவிக்கையில், 'டிஜிட்டல் மாற்றமானது AIA இற்கான அத்தியவசிய முன்னுரிமைக்குரிய விடயமொன்றாகும். எங்கள் வாடிக்கையாளர்களுக்கு எங்களின் வியாபாரத்தை மாற்றுவதற்கான தொழில்நுட்பத் தரத்தினை மேம்படுத்துவதற்காக நாங்கள் மிகவும் அர்ப்பணிப்புடன் பணியாற்றுகின்றோம்" எனக் குறிப்பிட்டார்.

பிரதான தொழில்நுட்ப அதிகாரி உமேஷி டீ பொன்சேகா கருத்துத் தெரிவிக்கையில், 'தற்போதைய மற்றும் எதிர்காலச் சவால்களுக்கு முகங்கொடுத்துத் தொடர்ச்சியாக நிறுவனத்திற்கு உதவக் கூடிய வகையில் மிகவும் உறுதியான தீர்வுகளைக் கட்டியெழுப்புவதற்கு இப்போட்டியாளர்களாக நுழைந்துள்ள நிறுவனங்களின் திறன்களினால் நாங்கள் மிகவும் ஈர்க்கப்பட்டுள்ளோம்" என்றார்.

இலங்கை மற்றும் மாலைதீவிற்கான AIA இன் நாட்டிற்கான முகாமையாளர் லீசா கெஷ்னர் கருத்துத் தெரிவிக்கையில், 'நிதியியல் சேவை உள்ளடங்கலாக டிஜிட்டல் மயமாக்கலை துரிதப்படுத்துவதன் மூலமாக நிலைபேறான மற்றும் உள்ளான வளர்ச்சியினை எய்துவது அவசியமானதாகும். எவ்வாறு டிஜிட்டல் தொழில்நுட்பம் கோவிட் 19 பெருந்தொற்றுக் காலத்தில் வியாபாரம் ஒன்றைத் தொடர்ச்சியாக நடாத்திச் செல்வதில் உதவியிருந்தது என்பதை எமது அனுபவத்தின் மூலமாக நாம் கண்ணுற்றிருந்தோம்" என்றார்.

சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் பிரதான நிதியியல் தொழில்நுட்ப அதிகாரி சொபெண்டு மொஹாந்தி கருத்துத் தெரிவிக்கையில், 'இந்த சவாலானது புதுமைக்கான மிகச்சிறந்த வழியாகவும், குறுகிய காலத்தில் சந்தையில் வணிக அறிமுகத்திற்கான தீர்வுகளை வழங்குவதையும் நிரூபித்துள்ளது" என்றார்.


Add new comment

Or log in with...