Tuesday, April 26, 2022 - 8:20pm
அமைச்சர் அலி சப்ரி நீதி அமைச்சராக இன்று (26) பிற்பகல், பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் அவர் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.
ஏற்கனவே நிதி அமைச்சராக உள்ள அவர் குறித்த பதவியிலும் தொடர்ந்து செயற்படுவாரென ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத்தும் கலந்துகொண்டார்.
கடந்த அமைச்சரவையிலும் அமைச்சர் அலி சப்ரி நிதியமைச்சராக பதவி வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Add new comment