சட்ட விரோதமாக இந்தியா செல்ல முயன்ற 7 பேர் கைது

மன்னார் பேசாலை பகுதியில் சம்பவம்

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வு காரணமாக இலங்கையில் வசிக்க முடியாமல்  இந்தியாவிற்கு  தப்பி செல்வதற்காக முயற்சித்த இரு குடும்பங்களைச் சேர்ந்த 7நபர்கள் நேற்றைய தினம் பேசாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பெரியவர்களும் நான்கு குழந்தைகள் உட்பட 7பேர் கைது செய்யப்பட்டு பேசாலை பொலிஸாரால் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

குறித்த வழக்கை விசாரித்த மன்னார் நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.எச். ஹைபதுல்லா இரு பெண்,  ஒரு ஆண் உட்பட மூன்று பெரியவர்களுக்கும் தலா 50,000ரூபா சரீர பிணையில் செல்ல அனுமதித்ததுடன், நான்கு பிள்ளைகளையும் பெற்றோர்களுடன் சேர்ப்பதற்கும் அனுமதி வழங்கியுள்ளார்.

 


Add new comment

Or log in with...