எரிபொருள் விலையேற்றத்துடன் பஸ் கட்டணம் 35% இனால் அதிகரிப்பு

- குறைந்தபட்ச கட்டணம் ரூ. 20 இலிருந்து ரூ. 27

எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக இன்று (19) நள்ளிரவு முதல் பஸ் கட்டணத்தை 35% ஆக அதிகரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

அதற்கமைய, குறைந்தபட்ச கட்டணம் ரூ. 27 ஆக அதிகரிக்கப்படுவதாக அச்சங்கம் அறிவித்துள்ளது.

இதேவேளை, தனியார் மற்றும் இ.போ.ச. பஸ் கட்டணங்களை 35% இனால் அதிகரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.


Add new comment

Or log in with...