எரிபொருள் விலையேற்றத்தை கண்டித்தும்; எரிபொருள் கோரியும் பல்வேறு ஆர்ப்பாட்டம்

- பல்வேறு பிரதான வீதிகள், புகையிரத பாதைகள் முடக்கம்

எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு எதிராக பல்வேறு பிரதேசங்களில் பொதுமக்கள் மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்டம் காரணமாக, பல்வேறு பிரதேசங்களிலும் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கமைய, சிலாபம் - கொழும்பு பிரதான வீதியை மறித்து மேற்கொள்ளப்படும் ஆர்ப்பாட்டம் காரணமாக, அவ்வீதியின் போக்குவரத்து காக்கப்பள்ளி வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, எரிபொருளை கோரி ரம்புக்கனை நகரில் பிரதான வீதி மற்றும் புகையிரத பாதையை மறித்து எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளன.

 

 

இதன் காரணமாக, பிரதான பாதையில் ரம்புக்கனை வரையிலும் மலையக மார்க்கத்தில் கடிகமுவ வரையிலும் ரயில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹிங்குராங்கொடை, பத்தேகம, திகண, காலி, மாதம்பே, கம்பளை, கண்டி, கேகாலை, மத்துகம பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


Add new comment

Or log in with...