CEYPETCO: உடன் அமுலாகும் வகையில் எரிபொருட்களின் விலை ரூ. 84 முதல் 113 வரை அதிகரிப்பு

- வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட எரிபொருள் கட்டுப்பாடு நீக்கம்

இன்று (19) முதல் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்படுவதாக, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CEYPETCO) அறிவித்துள்ளது.

அதற்கமைய

பெற்றோல்
ஒக்டேன் 92: ரூ. 254 இருந்து ரூ. 338 (ரூ. 84 ஆல்)
ஒக்டேன் 95: ரூ. 283 இருந்து ரூ. 373 (ரூ. 90 ஆல்)

டீசல்
ஒட்டோ டீசல்: ரூ. 176 இருந்து ரூ. 289 (ரூ. 113 ஆல்)
சுப்பர் டீசல்: ரூ. 254 இருந்து ரூ. 329 (ரூ. 75 ஆல்)

அதிகரிக்கப்பட்டுள்ளது. <<< இறுதியாக CEYPETCO மேற்கொண்ட எரிபொருள் விலை அதிகரிப்பு விபரம் >>>

ஏற்கனவே நேற்று நள்ளிரவு (18) முதல் லங்கா IOC எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பெற்றோல்
- ஒக்டேன் 92: ரூ. 303 இருந்து ரூ. 338
- ஒக்டேன் 95: ரூ. 332 இருந்து ரூ. 367

டீசல்
- Auto Diesel: ரூ. 214 இருந்து ரூ. 289
- Super Diesel: ரூ. 252 இருந்து ரூ. 327

அதிகரிக்கப்பட்டிருந்தன.

வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட எரிபொருள் கட்டுப்பாடு நீக்கம்

இதேவேளை, கடந்த வாரம் (15) கொண்டுவரப்பட்ட வாகனங்களுக்கு ஏற்ப விநியோகிக்கப்படும் எரிபொருள் அளவு தொடர்பான கட்டுப்பாட்டையும் நீக்குவதாக, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. 


Add new comment

Or log in with...