- பயணத்தடை மே 02 வரை நீடிப்பு
இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு, மே 02ஆம் திகதி கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜராகுமாறு மீண்டும் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
அவருக்கு விதிக்கப்பட்டுள்ள பயணத்தடை, அன்றைய தினம் வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக 2006 ஆம் ஆண்டு ஜூலை 01 ஆம் திகதி முதல் 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 08 ஆம் திகதி வரையான காலப்பகுதியில், அமைச்சரவையின் அல்லது நிதிச் சபையின் அனுமதியின்றி அமெர்காவின் இமாத் ஷா சுபைரிக்கு, இலங்கை அரசின் 6.5 மில்லியன் டொலர்களை செலுத்தியதன் மூலம், குற்றவியல் சட்டத்தின் கீழ், அஜித் நிவாட் கப்ரால் குற்றத்தை புரிந்துள்ளதாக அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்று எடுத்துக் கொள்ளப்பட்டபோது, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் இன்று (18) குறித்த உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன.
குறித்த வழக்கு தொடர்பில் இன்று (18) நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு, கடந்த ஏப்ரல் 07ஆம் திகதி அவருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்த போதிலும் அவர் இன்றையதினம் நீதிமன்றில் ஆஜராகியிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Add new comment