24 புதிய இராஜாங்க அமைச்சர்கள் பதவிப்பிரமாணம்

இன்று (18) பிற்பகல் 24 புதிய இராஜாங்க அமைச்சர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.

அத்துடன், இராஜாங்க அமைச்சர்களான பியல் நிஷாந்த, பியங்கர ஜயரத்ன ஆகியோர் தொடர்ந்தும் அவர்கள் வகித்த இராஜாங்க அமைச்சு பதவிகளில் நீடிப்பார்கள் என, ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இதேவேளை, இன்று (18) முற்பகல் 17 அமைசர்கள் பவிப்பிரமாணம் செய்து கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளிவிவகார அமைச்சரவை அமைச்சர் ஜீ.எல். பீரிஸ், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராகவும் பதவிப்பிரமாணம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் பிரதமர் உள்ளிட்ட 20 பேரைக் கொண்ட அமைச்சரவை அமைச்சர்கள்,  ஜீ.எல். பீரிஸ் தவிர்ந்த 25 பேரைக் கொண்ட இராஜாங்க அமைச்சர்கள் உள்ளடங்கிய அரசாங்கம் தற்போது அமைக்கப்பட்டுள்ளது.

பதவிப்பிரமாணம் செய்து கொண்ட புதிய இராஜாங்க அமைச்சர்கள்

1. ஜீ.எல். பீரிஸ் - பாதுகாப்பு

2. ரோஹண திஸாநாயக்க - மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள்

3. அருந்திக பெனாண்டோ - பெருந்தோட்ட கைத்தொழில்

4. லொஹான் ரத்வத்த - நகர அபிவிருத்தி

5. தாரக பாலசூரிய - வெளிவிவகார

6. இந்திக அநுருந்த - வீடமைப்பு

7. சனத் நிசாந்த - நீர் வழங்கல்

8. சிறிபால கம்லத் - மகாவலி

9. அநுராத ஜயரத்ன - நீர்ப்பாசன

10. சிசிர ஜயகொடி - சுதேச வைத்தியம்

11. பிரசன்ன ரணவீர - கைத்தொழில்

12. டீ.வி. சானக - சுற்றுலா மற்றும் கடற்றொழில்

13. டீ.பீ. ஹேரத் - கால்நடை வளம்

14. கே. காதர் மஸ்தான் - கிராமிய பொருளாதார பயிர்ச்செய்கை மற்றும் ஊக்குவிப்பு

15. அசோக பிரியந்த - வர்த்தகம்

16. ஏ. அரவிந்த்குமார் - தோட்ட வீடமைப்பு மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள்

17. கீதா குமாரசிங்க - கலாசார மற்றும் மேடைக்கலை

18. குணபால ரத்னசேகர - கூட்டுறவு சேவை விற்பனை அபிவிருத்தி மற்றும் நுர்வோர் பாதுகாப்பு

19. கபில நுவன் அத்துகோரள - சிறு ஏற்றுமதி பயிர்கள் அபிவிருத்தி

20. வைத்தியர் கயஷான் நவனந்த - சுகாதார

21. கலாநிதி சுரேன் ராகவன் - கல்விச் சேவை மற்றும் மறுசீரமைப்பு

22. டயனா கமகே - போக்குவரத்து

23. சீதா அரம்பேபொல - கல்வி மற்றும் தொழில்நுட்பம்

24. விஜித பேருகொட - துறைமுகங்கள் மற்றம் கப்பற்றுறை


Add new comment

Or log in with...