லண்டனில் எதிர்வரும் 16 ஆம் திகதி சனிக்கிழமை மாலை சாரல்நாடனின் 'வானம் சிவந்த நாட்கள்' நாவல் வெளியீடும், மறைந்த பேராசிரியர் சோ. சந்திரசேகரன் அஞ்சலி உரையும் நடைபெறவிருக்கின்றன.
மீனாள் நித்தியானந்தனின் தலைமையில் நடைபெறும் முதல் வெளியீட்டு அமர்வில் இடம்பெறும் சாரல்நாடனின் நாவல் வெளியீட்டு நிகழ்ச்சியில் செல்வி.சி. பாரதி, கோகுலரூபன், நாகலிங்கம் சிறிசபேசன் ஆகியோர் உரையாற்றுகின்றனர்.
நவஜோதி யோகரட்னம் தலைமையில் நடைபெறும் இரண்டாவது அமர்வில் பேராசிரியர் செ.வே. காசிநாதனின் 'விற்கன்ஸ்ரைன்: மொழி, அர்த்தம், மனம்' என்ற நூலின் வெளியீட்டு நிகழ்வில் தோழர் வேலு, உமையாள், ராகவன் ஆகியோர் உரையாற்றுகின்றனர்.
மறைந்த பேராசிரியர் சோ.சந்திரசேகரம் அவர்களின் அஞ்சலி உரையினை விமர்சகர் மு. நித்தியானந்தன் ஆற்றுகின்றார்.
Add new comment