பாதிக்கப்பட்ட பண்டிட் மக்களின் குரலாக ஒலிக்கும் KASHMIR FILES திரைப்படம்

காஷ்மீரிலிருந்து பண்டிட்டுகள் வெளியேற்றப்பட்டதை பின்னணியாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள 'த காஷ்மீர் ஃபைல்ஸ்' திரைப்படத்தை எடுத்த குழுவினரை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியிருந்தார்.

இந்தப் படத்தை பிரபல இயக்குநர் விகேக் ரஞ்சன் அக்னிகோத்ரி இயக்கியுள்ளார். இவரது மனைவியும் நடிகையுமான பல்லவி ஜோஷி, அனுபம் கெர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இயக்குநர், நடிகை பல்லவி ஜோஷி, தயாரிப்பாளர் அபிஷேக் ஆகியோர் பிரதமர் மோடியை சமீபத்தில் சந்தித்திருந்தனர். அப்போது அக்குழுவை பிரதமர் மோடி பாராட்டியிருந்தார். 

கடந்த 1990இல் காஷ்மீரில் இருந்து இந்துக்களான பண்டிட்டுகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். இந்தக் கதையை பின்னணியாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. குறைந்த எண்ணிக்கையிலான திரையரங்குகளில் இப்படம் கடந்த மாதம் வெளியானது. 

இருப்பினும் கடந்த மாத இறுதிவரை ரூ. 3.55கோடி வசூல் சாதனை செய்ததாகவும், விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவித்தன. இதுவரை அழுத்தமாக பேசப்படாத காஷ்மீரின் மற்றுமொரு துயர பக்கத்தை 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' அறிமுகம் செய்திருக்கிறது. 

80களின் பிற்பகுதியில், 90களின் மத்தியில் காஷ்மீரில் நிகழ்ந்த கிளர்ச்சி, நிலையற்ற தன்மை ஆகியவற்றின் ஆவணமாக, காஷ்மீர் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட பண்டிட்களின் குரலாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த இஸ்லாமியர்களையும் தீவிரவாதிகளாக சித்தரிப்பது எப்படி நியாயமற்றதோ, அதுபோலவே இந்துக்களான பண்டிட்களின் வாதங்களை கேட்க மறுப்பதும் நியாயமற்றதே என்பதை தீர்மானமாகச் சொல்கிறது இப்படம். 

'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' திரைப்படத்தில் பல்லவி ஜோஸி, அனுபம் கேர் ஆகியோருக்கு முக்கிய கதாபாத்திரங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இப்படத்தில் வெவ்வேறு சித்தாந்தங்களின் மீது நம்பிக்கை கொண்ட தனித்தனி குழுக்கள் காண்பிக்கப்படுகின்றன. பாகிஸ்தான் ஆதரவு காஷ்மீரிகள். இந்திய ஆதரவு காஷ்மீரிகள் அடுத்ததாக காஷ்மீரை தனிநாடாக அங்கீகரிக்க வேண்டும் என எழும் குரல்கள். 

இந்திய இராணுவ உடையில் வந்து இந்து பண்டிட்களை கொலை செய்யும் இஸ்லாமிய மதவாதிகளையும், மறுதரப்பில் தாக்குதல் நடத்தும் இராணுவத்திரையும் கூட காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர். இந்த சினிமா பல சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. இந்து பண்டிட்கள் கொலை செய்யப்படுவதைக் காட்டியிருப்பதே இந்த சர்சைகளுக்குக் காரணம். ஆனால் இயக்குநர் மிகத் தெளிவாக பல இடங்களில் விளக்கங்களைத் தருகிறார். சிவாவும் அப்துலும் நண்பர்கள். கிரிக்கெட் விளையாடும் காலம் தொட்டு நண்பர்களாக இருக்கும் அவர்களின் நட்பு குறித்த காட்சிகளும் கவனிக்கத்தக்கது. 

பண்டிட் குடும்பங்கள் காஷ்மீர் கிளர்ச்சி காலத்தில் அங்கிருந்து வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டனர் எனப் பதிவு செய்கிறது இத்திரைப்படம். Convert, Leave or die என்ற முழக்கம் இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் பண்டிட்களுக்கு எதிராக வைக்கப்படுகிறது. காஷ்மீரில் இருந்து வெளியேற மறுக்கும் பண்டிட்கள் கொலை செய்யப்படுகின்றனர். இப்படியாக பல முனைகளில் நின்று பேச நினைத்திருக்கிறார் இயக்குநர். 

மதம், மதநம்பிக்கை, மதப் பயங்கரவாதம் என மூன்றாக பிரித்துக் கொள்வோம். எந்த மதத்தை பின்பற்றுகின்றவர்களாக இருந்தாலும் இந்த மூன்று வகைக்குள் அடக்கம். விளக்கிச் சொல்வதானால் மதத்தை பெயரளவில் தங்கள் அடையாளமாக வைத்துக் கொள்கிறவர்களால் ஆபத்தொன்றும் இல்லை. இரண்டாவது மதநம்பிக்கை கொண்டு தத்தமது மத வழிபாட்டு முறைகளை பின்பற்றுகிறவர்கள். இவர்களும் பிறமதத்தினரோடு இணக்கமாகவே போகின்றனர்.

மூன்றாவது மதத்தின் அடிப்படையிலான பயங்கரவாதம். காஷ்மீரில் ஒரு கையில் மதத்தையும், மறுகையில் துப்பாக்கியினையும் ஏந்தி நின்றவர்கள் மதத்தின் அடிப்பையிலான பயங்கரவாதிகள். இவர்களை மிகச் சரியாக புரிந்து கொண்டால் மதம் வேறு, பயங்கரவாதம் வேறு என நாம் புரிந்து கொள்ள முடியும்.

'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' உண்மையில் காஷ்மீரில் இவ்வளவு பேரிழப்புகள் ஏற்பட அண்டை நாடுகளின் ஆக்கிரமிப்பும், இராணுவத்தின் எதிர்ப்பு நடவடிக்ைககளும் காரணம் என்கிறது. ஆனால் இயக்குநர் கொஞ்சம் புத்திசாலித்தனமாக இந்த வெவ்வேறு நம்பிக்கைகளைக் கொண்டவர்களை தனித்தனி குழுக்களாக காண்பித்திருக்கிறார். அதனால்தான் இக்கட்டுரையின் தொடக்கத்தில் “இப்படத்தில் வெவ்வேறு சித்தாந்தங்களின் மீது நம்பிக்கை கொண்ட தனித்தனி குழுக்கள் காண்பிக்கப்படுகின்றன” எனக் குறிப்பிட்டோம். 

இந்த உணர்திறனான சினிமா குறித்த விவாதங்களை முவைக்க வேண்டியது பார்வையார்களின் பொறுப்பு. இந்த சினிமாவை பார்க்கும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக புரிந்து கொள்ள முடிகிறது.

மதமும் தேசப்பற்றும் ஒரு நாடு இன்னொரு நிலத்தின் மீது ஆக்கிரமிக்க சொல்லிக் கொள்ளும் போலி சமாதானம் மட்டுமே என்பதை இந்த சினிமா சொல்கின்றது. 

இப்படத்தின் மூலம் நாம் கவனிக்க வேண்டிய இன்னொரு முக்கியமான விஷயம் காஷ்மீர் குழந்தைகள் குறித்ததானது. யுத்தம் மற்றும் எதிர்பாராத தாக்குதலால் மனதளவில் பாதிக்கப்பட்ட காஷ்மீர் குழந்தைகள் குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும். 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' அவசியம் பார்த்து விவாதிக்க வேண்டிய சினிமா. 

மதம், மதநம்பிக்கை, மதப்பயங்கரவாதம், இனப்படுகொலை,மக்கள் வெளியேற்றம், என்று தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் 11 மார்ச் 2022 அன்று வெளியான இந்தி மொழி திரைப்படமாகும். இத்திரைப்படத்தின் கதையை எழுதி, இயக்கிய விவேக் அக்னிஹோத்திரி மிக முக்கியமாக , அழுத்தமாக சொல்லிய விஷயம் - Convert, Leave or die என்ற முழக்கம் இஸ்லாமியர்கள் பண்டிட்களுக்கு எதிராக வைக்கப்பட்டது ஆகும் . காஷ்மீரில் இருந்து வெளியேற மறுக்கும் பண்டிட்கள் கொலை செய்யப்படுகின்றனர். இந்த வரலாற்று சம்பவங்களை நண்பர்களுடன் விவாதம் செய்து, பல புத்தகங்களை படித்து புரட்டி போட இந்த படம் ஒரு பெஸ்ட் எக்ஸாம்பிள். குடும்பத்துடன் கண்டிப்பாக்க பார்க்க முடியாது. வயது வரம்பு மிக முக்கியம் . ஆனால் காஷ்மீர் ஃபைல்ஸ் பற்றி குறிப்பாக எதிர்கால இந்திய குழந்தைகள் ஒரு நாள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும்.


Add new comment

Or log in with...