தினகரன் பத்திரிகை 90 ஆண்டு நிறைவு: பேருவளை முப்பெரும் விழா விருது நிகழ்வு

தினகரன் பத்திரிகையின் 90 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு பேருவளையில் முப்பெரும் விழா தினகரன் பிரதம ஆசிரியர் செந்தில் வேலவர் தலைமையில் கடந்த மார்ச் 27ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பிரதான நிகழ்வாக தர்காநகர் ஸாஹிரா கல்லூரியின் நளீம் ஹாஜியார் மண்டபத்தில் விருது வழங்கும் மாபெரும் நிகழ்வுக்கு இராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்த டி சில்வா தலைமை தாங்கினார்.

நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் மர்ஜான் பளீல், பேருவளை நகரசபையின் எதிர்க்கட்சி தலைவர் ஹசன் பாஸி, முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம்.எம். அம்ஜாத், பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஆர்.எம். பதியுதீன், முன்னாள் எம்.பி. அஸ்லம், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் இப்திகார் ஜெமில், ஏற்பாட்டுக் குழுத்தலைவர் பாஸி சுபையிர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விருது வழங்கலில் வசந்தம் செய்தி பிரிவுக்கான விசேட விருதை செய்தி பிரிவு பொறுப்பாளர் சித்தீக் ஹனீபா பெற்றுக் கொண்டார்.

அதை தொடர்ந்து சமூக சேவைக்கான விசேட விருது பெருமாள் பிள்ளை பாலசுப்பிரமணியம், K.M.S.M ராஸிக், ராமகிருஷ்ணன் சிறிதரன் ஆகியோருக்கும் இளம் தலைமைத்துவம் மற்றும் சமூக சேவைக்கான விருதுகளில் M.S.M.பாஹிம், பஸ்லான் பாருக், அஸாருதீன் மொயினுடீன், ஐ. ஐனுதீன், வசீர் முக்தார், ருஸ்தி மொஹமட், கல்வி மற்றும் சமூக சேவைக்கான விசேட விருது பரக்கத் அலிக்கு வழங்கப்பட்டது.


Add new comment

Or log in with...