தினகரனின் 90ஆவது ஆண்டு நிறைவு கிரிக்கெட் போட்டியில் பேருவளை எலந்தகொட வைட் ரோஸ் சம்பியன்

தினகரனின் 90 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு பேருவளை மாளிகாஹேன விளையாட்டு மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற கிரிக்கெட் போட்டியில் பேருவளை எலந்த கொட வைட் ரோஸ் அணி சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது.

 

இரண்டாமிடத்தை பேருவளை மஹகொட ஓரியன்ட் அணி பெற்றது.

அத்துடன் பாடசாலை மாணவர்களுக்கான போட்டியில் சம்பியனாக மாளிகாஹேன ஹீரோ போய்ஸ் அணி தெரிவானது. இரண்டாமிடத்தை ரோயல் அணியும் பெற்றது.

இந்த போட்டி நிகழ்வை தர்ஹா நகரைச் சேர்ந்த பாஸி சுபைர் ஒழுங்கு செய்திருந்தமை விசேட அம்சமாகும்.

அதிதிகளாக கலந்து கொண்ட பேருவளை நகர சபையின் எதிர்க்கட்சி தலைவர் ஹசன் பாஸி, புரவலர் ஹாசிம் உமர், பேர்கோ சிட்டி உரிமையாளரின் மகன் மின்ஹாஜ் தாலீப், தினகரன், தினகரன் வாரமஞ்சரி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் தே.செந்தில் வேலவர், தினகரன்-தினகரன் வாரமஞ்சரி பத்திரிகையின் இணை ஆசிரியர் மர்லின் மரிக்கார், தினகரன்-தினகரன் வாரமஞ்சரி பத்திரிகையின் பிரதம உதவி ஆசிரியர். எஸ்.சிறிகாந்த், தினகரன் இணையத்தள ஆசிரியர் எஸ்.எம். றிஸ்வான், தினகரன் உதவி ஆசிரிய அஜ்வாத் பாஸி, முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் எம்.எம்.எம். அம்ஜாத், சிரேஷ்ட ஊடகவியலாளர் பி.எம்.எம் முக்தார், பேர்கோ சிட்டி முகாமையாளர் மற்றும் பலரும் அதிதிகளாக கலந்து கொண்டு வீரர்களுக்கு சான்றிதழ் மற்றும் கிண்ணங்களை வழங்கி வைத்தனர்.

இந்த கிரிக்கெட் போட்டியில் சிறந்த துடுப்பாட்ட வீரர், சிறந்த பந்து வீச்சாளர், போட்டியின் தொடர் நாயகன், சிறந்த களத் தடுப்பாளர் ஆகிய விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பித்தக்கது.

இந்த கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் 40 உள்ளூர் அணிகள் பங்கேற்றன.

தர்ஹா நகரைச் சேர்ந்த பாஸி சுபைரால் தினகரன்-தினகரன் வாரமஞ்சரி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் தே.செந்தில் வேலவருக்கு நினைவுச் சின்னம் வழங்கி கௌரவித்தமை விசேட அம்சமாகும்.

பேருவளை விசேட நிருபர் பி.எம்.எம். முக்தார்


Add new comment

Or log in with...