தினகரன் 90ஆவது ஆண்டு நிறைவு உதைபந்தாட்ட போட்டியில் தர்கா நகர் மக்பூட் கழகம் சம்பியன்

தர்கா நகர் மக்பூட் கழகம் சம்பியன்

தினகரனின் 90 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு பேருவளை ஹெட்டிமுல்லை போகோ சிட்டி உதைபந்தாட்ட அரங்கில் ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற உதைபந்தாட்ட போட்டியில் தர்கா நகர் மக்பூட் கழகம் சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது.இரண்டாமிடத்தை பேருவளை கெசல்ட் விளையாட்டுக்கழக அணி பெற்றது.

பிரதம அதிதியாக கலந்து கொண்ட ஈஜிஆய்வு கூட நிறுவன முகாமைத்துவப்பணிப்பளார் என்.டி எம் ஹாரிஸ் வெற்றி பெற்ற அணிக்கான கிண்ணத்தை வழங்கி வழங்கிவைத்தார்.

பிரதம அதிதிகளாக கலந்து கொண்ட போருவளை நகர சபையின் எதிர்க்கட்சி தலைவர் ஹசன் பாஸி, புரவலர் ஹாசிம் உமர், பேர்கோ சிட்டி உரிமையாளரின் மகன் மின்ஹாஜ் தாலீப், தினகரன் தினகரன் வாரமஞ்சரி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் தே.செந்தில் வேலவர், தினகரன்-தினகரன் வாரமஞ்சரி பத்திரிகையின் இணை ஆசிரியர் மர்லின் மரிக்கார்,தினகரன்-தினகரன் வாரமஞ்சரி பத்திரிகையின் பிரதம உதவி ஆசிரியர். எஸ்.சிறிகாந்த், தினகரன் இணையத்தள ஆசிரியர் எஸ்.எம் றிஸ்வான், தினகரன் உதவி ஆசிரியர் அஜ்வாத் பாஸி, ரீபொன் நிறுவன சந்தைப்படுத்தல் முகாமையாளர் சப்ரி சவாஹீர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அத்துடன், பேருவளை உதைபந்தாட்ட சங்கத்தின் உப தலைவர் ஏ.ஆர்.எம் பதியூதீன் , முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் எம்.எம்.எம் அம்ஜாத்,கோல்டன் கேட் சர்வதேச பாடசாலையின் அதிபர்,சுப்பர் சன் அணியின் முகாமையாளர் சிபான் சுகைப்தீன்,சிரேஷ்ட ஊடகவியலாளர் பி.எம்.எம் முக்தார். பேர்கோ சிட்டி முகாமையாளர் மற்றும் பலரும் அதிதிகளாக கலந்து கொண்டு வீரர்களுக்கு சான்றிதழ் மற்றும் கிண்ணங்களை வழங்கி வைத்தனர்.

இந்த உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியில் சிந்த பந்து காப்பாளர், சிந்த தங்க காலணி,சிறந்த விளையாட்டு வீரருக்கான விருது ஆகியன வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பித்தக்கது.இந்த உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியில் 12 உள்ளூர் அணிகள் பங்கேற்றன.

போருவளை விசேட நிருபர் பி.எம்.எம் முக்தார்

படங்கள் :  ரஞ்சித் அசங்க,  இன்பாஸ் சலாஹூதீன்


Add new comment

Or log in with...