LIOC இற்கு விஜயம் செய்த இந்திய வெளிவிவகார அமைச்சர்

இந்திய வௌிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் கொழும்பிலுள்ள லங்கா ஐ.ஓ.சி. எரிபொருள் நிரப்பு நிலையமொன்றிற்கு விஜயம் செய்துள்ளார்.

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள எஸ். ஜெய்சங்கர் பல்வேறு இந்திய நிறுவனங்களையும் பார்வையிட்டுள்ளார்.

அத்துடன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

குறித்த சந்திப்புகளின் போது இலங்கையின் பொருளாதாரம், நிதியுதவி, இரு நாட்டு நல்லுறவு தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

 

 

 

 

 

 

 

 

 

 


Add new comment

Or log in with...