இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை வருகை

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் நேற்று (27) இலங்கை வந்தடைந்தார்.

இலங்கைக்கு இருநாள் விஜயத்தை மேற்கொண்டுள்ள அவர், வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் விடுத்துள்ள அழைப்பை ஏற்று நேற்று கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக இலங்கை வந்தடைந்தார்.

இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் நாளை 29ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ள பிம்ஸ்டெக் அமைச்சர்கள் மட்ட மாநாட்டில் பங்கேற்க உள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கையில் தங்கியுள்ள நாட்களில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ  உள்ளிட்ட முக்கிய தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த பேச்சுவார்த்தைகளின் போது இலங்கை இந்தியாவிடம் எதிர்பார்த்துள்ள முக்கிய விடயங்கள் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்படவுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

அதேவேளை இலங்கை விஜயத்திற்கு முன்பதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் நேற்றைய தினம் மாலைதீவுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்


Add new comment

Or log in with...