2ஆவது நீதிமன்ற அவமதிப்பு குற்றத்தை ஏற்றுக் கொண்ட ரஞ்சன் ராமநாயக்க

Ranjan-Ramanayake-Pleads-Guilty-2nd-Condemn-of-Court

நீதிமன்றத்தை அவமதித்ததாக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இரண்டாவது வழக்கில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

குறித்த வழக்கு இன்று (25) புவனேக அலுவிஹாரே, எல்.ரீ.பி. தெஹிதெனிய, காமினி அமரசேகர ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது ரஞ்சன் ராமநாயக்கவின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி, தமது கட்சிக்காரர் தான் குற்றவாளி அல்ல எனத் தெரிவித்திருந்த கருத்தை மீளப்பெற்று, குற்றத்தை ஏற்கத் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

அதனையடுத்து, ரஞ்சன் ராமநாயக்க நீதிமன்றத்திற்கு அழைக்கப்பட்டு, நீதிபதிகள் குழாம் முன்னிலையில் அது தொடர்பில் விசாரணை செய்தனர்.

இதன்போது குறித்த குற்றச்சாட்டுகளை தாம் குற்றவாளி என்பதை ஏற்றுக் கொள்வதாக நீதிமன்றில் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார்.

இதேவேளை, நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட ரஞ்சன் ராமநாயக்கவுக்கு, 4 வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு அதனை அவர் அனுபவித்து வருவதோடு, குறித்த சிறைத்தண்டனை காரணமாக அவர் தனது எம்.பி. பதவியையும் இழந்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...